மதங்கள் + மதத்தலைவர்கள்

மதங்கள் + மதத்தலைவர்கள்

எல்லா மதங்களுக்கும், மதத் தலைவர்களுக்கும் இடையே மிகப் பெரிய ஒற்றுமை ஒன்று உண்டு. அது கணிதமும் அதை கற்பிக்கும் ஆசிரியர்கள் போல். அது எப்படி?
கணிதம் சொல்லும்
இப்படித்தான் இருக்கும் நேர்கோடு, இப்படித்தான் இருக்கும் முக்கோணம்..
...சதுரம்.... என்று அடித்துச் சொல்லும். மறுபேச்சக்கே
அங்கு இடமில்லை. அதுபோல் தான் எல்லா மதங்களும். ஒரு மதம் சொல்லும் கடவுள் ஒரு நேர்கோடு. இன்னொரு மதமோ இல்லை கடவுள் ஒரு முக்கோணம்..... இதை மறுத்தால் ஆசிரியர்கள் போல் மதத் தலைவர்களும் உங்களை தண்டிப்பார்கள்.
கடவுள் நேர்கோடும் அல்ல முக்கோணமும் அல்ல. அவன் உங்களுக்கு சொந்தம். வட்டம் போட்டு அவனை அதற்குள் சிறை வைக்காதீர்கள். அவனைப் பட்டம் போல் பறக்க விடுங்கள். நீங்களும் அவனோடு சேர்ந்தே பறவுங்கள்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (23-Aug-21, 2:17 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 37

மேலே