காதல் பெருந்தொற்று

என் அருமை காதலியே;
காதல் என்பது பெருந் தொற்று;
கவனிக்காமல் போனல் போய்விடும் நம்மை விட்டு;

பெண்ணே! நீ ஒருமுறை கண்டு விட்டாள்,
காதல் வந்தே உடன் ஒட்டும்; முகம் பட்டு.

காதல் என்பது பெருந்தொற்று;
காட்டுத் தீயாய் பரவும் உன்னை கட்டியணைத்து;
காதல் என்பது பெருந்தொற்று;
கட கட வென்றே பெருகி, இதயத்தை பற்றும் உடன்பட்டு.

காதல் என்பது பெருந்தொற்று; நம் காதலை மறைக்கவேண்டாம் முகக்கவசம் இட்டு.
காதலைக் கலங்கப்படுத்த வேண்டாம் கையுறை போட்டு.

இதயமே வெடித்துவிடவேண்டாம் இடைவெளி விட்டு.
கைகோர்த்து போனாலே வளரும் இந்த காதல் தொற்று;
காதல் தொத்து
வந்தே ஒட்டிக்கொண்டால் அது நம் சொத்து;
தனிமையில் பிடிக்கும் காதல் பித்து;
பத்துபோட்டால் பரவிடும் நம் காதல் தொற்று.

பழகிப் பார்த்தால் தெரிந்து விடும்
என் காதல் பித்து.

தனிமை தனிமையே
தனிமையும்
வேக வைக்கும் நம் காதலை பிரித்து;
தனித்து இல்லாமல் இருந்தலே, வளரும் நம் காதல் தொற்று.
நான் முகக்கவசம் போடமறுத்துவிட்டேன், முத்தமழைகேட்டு;

நாசினியை நான் தடவ மறுத்துவிட்டேன்;
நாசியில் உன் காதல் சுவாசத்தின் வரவைக்கேட்டு.
தடுப்பூசியைக் கூட போட மறுத்தேன் உன் காதலை நினைத்து.

தள்ளி தள்ளி போகாதே
காதல்நோய் தான் பெரும் தொற்று.

கண்ணே உன்னை கட்டி அணைத்தால் தான் தீரும் இந்த காதல் வியாதியான பெரும் தொற்று.
இந்த தொற்று இதயத்தில் தான் தங்கி இடம் பிடித்து
இன்ப ஆசைகளை பரப்பட்டுமே
உன் கரம் பிடித்து

சுருட்டிப்போட வேண்டாம்காதல் நோயை பரவாமல்விட்டு
சுற்றி வந்தே தொற்றி விட்டாய்
காதல் வைரசாய்;

சுகமாய்த்தான் இருக்க வைத்தாய்
பேயாய் திரியவிட்டு.
பைத்தியமாய் திரியவிட்டாய் பெரும் தொத்தாய் காதலை தந்து விட்டு.
இவளே காதல் ஜீரத்தை தந்து விட்டு கண்டும் காணாமல் போனாளே என்னை விட்டு.
காதல் தொத்துக்கு இவள் தான் மருந்து என்பதை மறந்துவிட்டு.
காதலே
மருந்தாய் அவளை பிடித்து,
அவள் மடியில் கிடத்து;
அவள் அருகில் இருந்தால், காதல் தொத்தில் ஜீவிப்பேன்;

அது காதல் தொற்று;
அது கட்டிப்போடும் பெரும் தொற்று.

கொரோனா போன்று இல்லாது
கொல்லாமல் கொல்லும்; செல்லாமல் கொல்லும்;
பெரும் தொற்று.

இது கொரோனா இல்லை காதல் தொற்று;
உள்ளத்தில் தங்கியே தாக்கும் பெரும் காதல் தொற்று.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (25-Aug-21, 3:20 pm)
பார்வை : 94

மேலே