காதல் கொண்ட மனம்

என் இனியவளே
நீ என்னருகில்
இருக்கும் போது
என் மனதிலுள்ள
கவலைகள் எல்லாம்
என் காலடியில் இருக்கும் ...!!

நீ என்னை விலகி சென்றால்
காலடியில் இருக்கும்
கவலைகள் எல்லாம்
மீண்டும் என் மனதில்
குடியேறி விடுகிறது ...!!

அந்த கவலைகளின் பாரத்தை
என் மனம் தாங்கி கொள்கிறது
ஆனால் ...
உன் பிரிவின் பாரத்தை மட்டும்
காதல் கொண்ட என் மனம்
தாங்க முடியாமல் தவிக்குது ...!!

என் இனியவளே
நீ இனிமேல் வந்து வந்து
போக வேண்டாம்
நிரந்தரமாக
என் மனதில் குடியேறி விடு ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Aug-21, 10:27 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal konda manam
பார்வை : 235

மேலே