பரிணாம வன்மம்

கை வைத்து பறிக்கலாம் அந்த மாம்பழத்தை
பரிணாம வன்மம் இன்னும் தீரவில்லை
கல் வீசினேன் மூன்று கற்கள் மூன்று முறை
மூன்றாம் முறை கீழே விழுந்தது மாம்பழம்
அதிர்ஷ்ட கல் என்று கல்லை எடுக்க சென்றேன்
சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன்
கீழே கிடந்த மாம்பழத்தை
கொத்தி கொத்தி தின்று கொண்டிருந்தது
ஒரு அணில்.

எழுதியவர் : -பேய்க்கரும்பன்கோட்டை அக (30-Aug-21, 5:44 pm)
சேர்த்தது : t akilan
Tanglish : parinaama vanmam
பார்வை : 155

மேலே