பத்ர காளி ஆட்டம்

பத்ர காளி ஆட்டம்
மனிதர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் சோழ மண்டலத்தில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் காளியாட்டம் தெய்வ நம்பிக்கையோடு கலைநயம் மிகுந்த கலைஞர்களின் ஈடுபாட்டோடு நடைபெறும் காளியாட்டம் இந்த சிறுகதை மூலம் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்த களியாட்டம் என்னும் திருவிழா அனைத்து சோழ மண்டலத்தை சார்ந்த ஊர்களிலுள்ள பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழா தொடங்குவதற்கு முதல் நாள் காப்பு கட்டுவார்கள் அந்த காப்பு கட்டிய பிறகு யாரும் வெளியூர் செல்ல கூடாது திருவிழா முடியும் வரை. இந்த திருவிழா அனைத்து திருவிழாக்களிலும் இருந்து மாறுபட்டது. கடவுள் மனிதர் மூலம் சாதி பார்க்காமல் ஏழை பணக்காரன் பார்க்காமல் அனைவரது வீடு தேடி வரக்கூடியது.

களியாட்டம் என்னும் திருவிழா நடனக்கலை தெரிந்த ஒரு ஆண் மகனுக்கு சேலை கட்டி அனைத்து நகைகளும் அணிந்த இரண்டு கைகள் பக்கமும் காளிக்கு உள்ளது போல் பல கைகள் பொருத்தப்பட்டு ஒரு கையில் கத்தியும் மற்றொரு கையில் வேப்பிலையும் அதன் பிறகு தலையில் துணிகளால் முண்டாசு கட்டப்படும் இறுதியாக காளி ஒருவன் பொறித்த மரத்தால் ஆன சிரசு என்று சொல்லப்படும் தலை உருவம் தூக்கி வைக்கப்படும் . அதன் பிறகு பூஜைகள் நடந்து முடிந்து தீபம் காண்பித்து இறுதியாக காளி கோவிலில் இருந்து புறப்பட்டு தெரு தெருவை அனைவரது வீட்டுக்கு சென்று தீபம் காண்பித்து நடனம் ஆடி செல்லும் இது போன்று தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும்.

காளி சிலை தலையில் வைக்கப்பட்டவுடன் அதனை பிடித்துக் கொள்ள பின் பகுதியில் ஒருவர் தொடர்ந்து வருவார். காளி எப்படியெல்லாம் அடுக்கிறாரோ அதே போல் காளியின் பின்பக்கம் இருப்பவரும் ஆடுவர். இப்பொழுது எல்லாம் சில ஊர்களில் காளி உருவத்தை பின் பகுதியில் பிடிக்க ஆள் இல்லாமல் பொறுத்தபடுகிறது. காளி தானாக சிலையை சுமந்து கொண்டு ஆடுகிறது.

காளி வேடம் மேற்கொள்வோருக்கு நடனம் தெரிந்திருக்க வேண்டும் சொல்லப்போனால் இதுவும் ஒரு வகை தெருக்கூத்து தான். காளி உருவம் பொறித்த மர சிலையில் பல வகைகள் உள்ளன அவைகள் முறையே சிவப்பு காளி, பச்ச காளி , பவள காளி என்று உள்ளன. சில ஊர்களில் ஒரு காளி ஆட்டம் மட்டும் தான் நடைபெறும் சில ஊர்களில் ஒரே நேரத்தில் பலவிதமான காளி ஆட்டம் நடைபெறும்.
காளி பார்ப்பதற்கு ஆக்ரோஷமாக இருந்தாலும் நடனம் பார்ப்பதற்கு அழகுதான். சொல்லப்போனால் சில இடங்களில் சினிமா பாடல்களுக்கு கூட காளி நடனமாடுவதுண்டு. காளி ஆட்டத்தில் அனைவரையும் கவர்ந்த நடனம் பாம்பு நடனம்.

காளி தெரு தெருவாக வரும் போது வீட்டின் உள்ளே வருவதில்லை வீட்டில் வாசலில் இருக்கைகள் போடப்பட்டு அதில் அமர்த்தி வைக்கப்படுகிறது . ஒவ்வொரு வீட்டில் வசதிக்கு ஏற்ப செலவு செய்து பூஜை நடத்தப்படுகிறது. பூஜை நடந்து தீபம் காண்பித்த பிறகு அனைவருக்கும் பிரசாதங்களும் குளிர்பானங்கள் கொடுக்கப்படும். வசதி படைத்தவர்கள் வேஷ்டி துண்டு பணம் போன்றவைகள் கொடுப்பார்கள். இந்த களியாட்டத்தில் பணத்திற்கு மதிப்பு கொடுக்கப்படுகிறது. எப்படி சொல்கிறேன் என்றால் அதிகம் கவனிக்கப்படும் வீடுகளில் காளி அதிக நேரம் நடனம் ஆடி காத்திருக்கும் அதுவே சாதாரண வீடுகளுக்கு செல்லும் ஆனால் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் தீபம் காண்பித்தவுடன் புறப்பட்டு விடுவார். இந்த ஒரு விஷயம்தான் ஏற்கமுடியாது ஒன்று. மற்றபடி அனைத்தும் அழகுதான்.


. காளி நடனம் அழகு கலை நயம் மிகுந்த பார்ப்பதற்கு தத்ரூபமாக இருக்கும். சொல்ல போனால் இது ஒரு வித்தியாசமான திருவிழாதான். காளியுடன் வாத்திய கலைஞர்கள் தெரு தெருவாக சுற்றி வருவார்கள். ஏன் நானும் சிறு வயதில் என் நண்பர்களோடு காளியுடன் தெரு தெருவாக சுற்றியது உண்டு அவைகளை என்றும் என் வாழ்நாளில் நான் மறக்க மாட்டேன். இது போன்ற வாய்ப்புகள் எல்லாம் இப்பொழுது நகர் புறத்தில் வாழும் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை.

காளி ஆட்டம் என்பது ஒருவித தெரு கூத்து தான். தமிழ் நாட்டுப்புற கலைகளில் ஒரு வகை ஆகும். எத்தனை நூற்றாண்டுகள் மாறினாலும் இந்த திருவிழாவை அனைத்து தலைமுறைகளும் விடாமல் வருட வருடம் நடத்திவருகிறார் அதுவே ஒரு சிறப்புதான். ஏன் என்றால் பல நாட்டுப்புற கலைகளும் தெருக்கூத்துகள் அழிந்து வரும் நேரத்திலும் வருட வருடம் விடாமல் இந்த காளி ஆட்டத்தை நடத்திவருவது மிக சிறப்பு. அந்த பகுதி மக்கள் தமிழ் மீதுள்ள பற்று மற்றும் தமிழ் நடனக்கலை மீது உள்ள ஆர்வமும் கடவுள் மீதுள்ள நம்பிக்கையும் பிரதிபலிக்கிறது.

இப்படி ஒவ்வொருவரும் தமிழ் மீதும் தமிழ் நாட்டு புறக்கலைகள் மற்றும் தெருக்கூத்துக்கள் மீதும் ஈடுபாட்டோடு விடாமல் ஆர்வம் காட்டி வந்தால் தமிழ் கலைகள் அழியாது பாதுகாக்கப்படும் மேலும் பல கலைஞர்கள் வாழ்வு மேம்படும் மேலும் நம்முடைய பாரம்பரிய குலதெய்வ வழிபாடுகள் இப்படி பல நிகழ்வுகள் நம் அடுத்த தலைமுறைக்கும் போய் சேரும் அதன் மூலம் அழிவதை தடுக்கலாம்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (2-Sep-21, 8:30 am)
பார்வை : 128

மேலே