கனவுலகம்

கனவுலக தேவதையே
ஆத்தங்கரை ஓரம்
காற்றாட நடந்து போவோமா?

காதல் கதைகள் பேசி
கன்னித் தமிழுக்கு
காதல் சேர்ப்போமா?

உன் இதழில் தேன் பிடித்து
இலக்கியக் கவிதை
இயற்றுவோமா?

உன் கார் குழலுக்கு
கமழும் மலர் தேடுவோமா?

மலர் பாதங்களுக்கு
மலர்களின் இதழ்
விரிப்போமா?

யாருமற்ற தனித்தீவில்
ஏகாந்தமாய் படுத்து
எண்ணிய விண்மீன்களை
எடுத்து சூடுவோமா?

பறவை போல
சிறகை பூட்டிக்கொண்டு
சில்வண்டாய் பறந்து
சிகரங்களை கடப்போமா?

இறப்பில்லா யாக்கை பெற்று
இன்பக் களிப்பில்
மிதப்போமா?

நிலவில் நானும் நீயும்
நித்திரை கொள்வோமா?

விண்மீனை சேர்த்து அள்ளி
விண்வெளியில் வீசி
விளையாடுவோமா?

மு குமார்
7/9/21

எழுதியவர் : மு குமார் (7-Sep-21, 3:11 pm)
சேர்த்தது : மு குமார்
Tanglish : kanavulakam
பார்வை : 423

மேலே