412

நம் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்🙏🙏🙏🙏🙏

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு என் அன்பு வணக்கங்கள் ...
"மக்கள் சேவையே மகேசனுக்கு செய்யும் சேவை" என்பதை மனதில் ஏற்றி,
அனைத்துத் துறைகளிலும்
மக்களின் குறைகளை உடனுக்குடன் கண்டறிந்து தீர்ப்பதில் பகீரத முயற்சி செய்துவருகிறீர்கள்...
தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெறுகிறது என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை.... அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ...

இருந்தாலும் பார்வைக்கு வராத சில குறைகளை தங்கள் கவனத்திற்கு கொண்டுவரும் முயற்சிதான் இந்தப் பதிவு....

நம் தமிழகத்தில் மட்டும் ஐந்து லட்சத்திற்கும் மேலான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்... அவர்களில் விளையாட்டுத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளம் வீரர் வீராங்கனைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் .... அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பலர் ஆர்வமாக உள்ளனர்... ஆனால் அவர்கள் சென்னைபோன்ற முக்கியமான இடங்களில் பாதுகாப்பாக தங்கி பயிற்சி எடுத்துக்கொள்வதற்கான சிறப்புத் தேவைகளுடன் கூடிய விடுதிகள் இல்லை....
முக்கியமாக ஈட்டி எறிதல் , குண்டு எறிதல், ஆர்ச்சரி, வீல்சேர் ரேஸ் போன்ற விளையாட்டுகளில் அவர்கள் சிறப்புப் பயிற்சி மேற்கொள்ள விளையாட்டு திடல்கள் இல்லை.... அதற்குத் தேவையான equipments'ம் இல்லை... வீல்சேர் ரேஸிற்கு தேவையான சிறப்பு வீல்சேரின் விலை 4லட்சம் , ஆர்ச்சரிக்கு தேவையானவையும் பல ஆயிரம்.... பெரும்பாலும் மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளால் , ஆர்வம் இருந்தும் இதற்கான செலவுகள் செய்ய இயலாத கையறு நிலையில்தான் உள்ளனர்.....

சமீபத்தில் , விஜய சாரதி என்ற மாற்றுத்திறனாளி சகோதரரை நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் சந்திக்க நேர்ந்தது... அவர்
2009ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல் மாராத்தான் ரேஸ் வெற்றி வீரர் ...
2010ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் வீல்சேர் ரேஸ் வென்றவர்,
தேசிய அளவில் 47 பதக்கங்கள் வென்றவர்... தினம் தன் அன்றாட தேவைக்கே ஓடிக் கொண்டிருக்கும் அவரால் ஒலிம்பிக் வரை செல்ல இயலவில்லை ... தமிழக அரசு வழங்கும் மாதத்திற்கு ரூ1500 உதவித் தொகை, அவர்கள் வயிற்றுப்பசியைக்கூட போக்க இயலாது என்பதே நிதர்சனம்.

இதற்கெல்லாம் மேலாக மிகவும் வேதனைப்படும் விசயம் என்னவென்றால், சில தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் நன்கொடையாக வாங்கி கொடுத்துள்ள பல லட்சம் பெறுமான மதிப்புள்ள வீல்சேர்கள் பாதுகாப்பாக வைக்க இடமில்லாமல், கதவுகூட இல்லாத ஒரு தகர செட்டில் மிகவும் பழுதடைந்து சேதமடைந்த நிலையில் குவிந்து கிடக்கின்றன...
இவற்றை சீர்செய்து நல்லதொரு பாதுகாப்பான அறையில் வைத்தால், ஒருசில மாற்றுத்திறனாளிகளாவது பயன்பெறுவர்.... அவர்களுக்குத் தேவை அனுதாபம் அல்ல... தகுந்த உதவியும் ஊக்கமுமே...,

மதிப்பிற்குரிய முதல்வரே, தாங்கள் தயவுகூர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு விடுதியுடன் கூடிய விளையாட்டு திடலை சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் ஏற்படுத்திக் கொடுத்தால்.... இந்த பேரா ஒலிம்பிக்கில் இதுவரை 9 பதக்கங்களை வென்ற இந்தியா , அடுத்த ஒலிம்பிக்கில் இதைவிட பன்மடங்காக பதக்கங்கள் வென்று, உலக நாடுகளின் பதக்கப் பட்டியல் வரிசையில் முன்னணியில் இருக்கும். அதில் நம் தமிழகம் பெரும்பங்கு வகிக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

இவண்,
தமிழகத்தின் பல்லாயிரம் மாற்றுத்திறனாளிகளின் குரலாய்
கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (7-Sep-21, 7:34 pm)
பார்வை : 44

மேலே