414

சில நேரங்களில் நம் உள்ளுணர்வு எதையோ ஒன்றை நமக்கு உணர்த்தும்.... அது நிச்சயமாக நடந்தே தீரும் ...
என் உள்ளுணர்வின் மீது அப்படியொரு அசைக்க முடியாத நம்பிக்கை எப்போதும் உண்டு....

நம் வாழும் சகாப்தம் , திரையுலக மார்க்கண்டேயன் என் பெரும் மதிப்பிற்குரிய திரு.சிவக்குமார் ஐயா அவர்கள் தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவல்களை என்னிடம் வாட்ஸப் மூலம் பகிர்ந்து கொள்வார்... எப்போதாவது திடீரென அழைத்துப்பேசி அவசியமான தகவல்களை பரிமாறி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பதும் உண்டு.....

நான் எப்போதாவது என் கவிதையை ஐயா அவர்களுக்கு அனுப்புவேன்... உடனே அதைப் பாராட்டி பதிலுரைப்பார்... இன்றும் வழக்கம்போல் சமீபத்தில் நான் முகநூலில் பதிவிட்ட கவிதை ஒன்றை அனுப்பினேன்...

"நினைத்தது நிறைவேறட்டும் 😊🙏" என்று ஐயாவிடமிருந்து ஆசி வந்தது....

ஆனால் ஏதோ ஒரு உள்ளுணர்வு, இன்று சிவக்குமார் ஐயா என்னை அழைப்பார் என்று தோன்றியது ... அழைக்கும்போது கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையுடன் இருந்தேன்... எங்கள் பணிப்பெண் மேரி அவர்களிடம் , "என் ஃபோன் அடிச்சா டக்குனு கூப்டுங்க மேரியம்மா " என்று சொல்லியவண்ணம் சமையலறை விரைந்தேன்.... என் கைப்பேசி அடித்தது, ஓடிவந்து எடுத்தேன்.... அழைத்தது சிவக்குமார் ஐயாவே தான் .... மெய்சிலிர்த்துப்போனேன்...
எடுத்த எடுப்பில் என் எழுத்துக்களை வெகுவாக பாராட்டினார் ... " எம்மா இத எதோ சும்மா சொல்றேன்னு நெனைக்காத, ஒனக்கு இறைவனோட அருள் இருக்கு... இல்லன்னா இந்த மாதிரியெல்லா வார்த்தைகள போட்டு கவிதை எழுத முடியாது... எப்டி வார்த்த வந்து விழுதுபாரு..... அதெல்லா தன்னால உள்ளருந்து வரணும் ....இறைவனோட ஆசியும் என்னோட ஆசியும் உனக்கு என்னென்னைக்கும் இருக்கும்மா.... நீயாவது காலேஜ்லா போய் படிச்சிருக்கே, நான் படிக்காதவன் , அப்டியே வாழ்க்கைய சினிமாலே ஓட்டிட்டேன்... என்னோட 67 வயசுல கம்பராமாயணத்தப் படிச்சேன், 74வயசுல அதில இருக்கிற பாடல்களை எல்லா படிச்சு விளக்கத்தோடு பேசி சிடி போட்டேன், ஒனக்கு இன்னும் வயசு இருக்கு நெறைய எழுதணும்" என்று ஆசிர்வதித்தது மட்டும் அல்லாமல், கம்பராமாயணத்தின் கதை சுருக்கத்தையும் ஒருமுறை எனக்கு நினைவுபடுத்தினார்...
"அதுல பாரும்மா , சூர்ப்பநக காதல சொல்லி மூக்கறுபடுறா பாரு, அதுதா ராமயணத்துல டேர்னிங் பாயின்ட், என்ன சொல்ற, நா சொல்றது கரைக்ட்டு தானே?" விரைவாக ஒரு கம்ப இராமயணப் பாடலையும் சொல்லி என்னை மெய்சிலிர்க்க வைத்தார்... பத்து நிமிடம் பேசினார்... அப்பப்பா! அதற்குள் எத்தனை எத்தனை தகவல்கள்... இடைமறித்து சிலநேரம் அவர்கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலுரைத்தேன்....

கடைசியாக, "நீ நல்லா இருப்பமா... உனக்கு பெரிசா ஆண்டவன் அருள் இருக்கு, நானும் உன்ன ஆசிர்வதிக்கிறேன்" என்று சொல்லி முடித்தபோது, நொகிழ்ச்சியுடன் "நன்றி ஐயா!" என்று நான் சொல்வற்குள் என் கண்களும் உணர்ச்சிப்பெருக்கில் கசிந்து விட்டது....

கேட்காமல் கிடைக்கும் இதுபோன்ற மாமனிதர்களின் ஆசிர்வாதங்கள் உண்மையில் எனக்குள் இறையருள் இருப்பதை இன்னும் உறுதிபடுத்துகிறது... எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி!🙏

எழுதியவர் : வை.அமுதா (7-Sep-21, 7:39 pm)
பார்வை : 26

மேலே