போவிப்பம் பாழின் உடம்பை நாழி அரிசிக்கே நாம் – நல்வழி 19

நேரிசை வெண்பா

சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராட்டிப் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். 19

- நல்வழி

பொருளுரை:

வயிற்றினுடைய பசிக் கொடுமையினாலே பிறரைச் சேவித்தும், பலரிடத்தே போய் யாசித்தும், தெளிவாகிய நீரையுடைய கடலைக் கடந்து வேறு நாடு சென்றும், ஒருவரைப் பெரியவராகப் பாவித்தும், பாராட்டு செய்து செல்வரைப் புகழ்ந்து பாட்டுப் பாடியும் நாம், இந்த உடம்பினை, நாழி யரிசிக்காகவே வீணிலே செலுத்துகின்றேம்.

கருத்து:

வீட்டு நெறியிற் செல்லும் பொருட்டு அரிதாகக் கிடைத்த மனிதவுடம்பினை உணவு தேடுவதிலேயே கழிப்பது அறியாமையாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Sep-21, 9:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே