7 - சின்னஞ்சிறு விரல்களினால் - தாத்தா பேத்தி தாலாட்டு

சின்னஞ்சிறு விரல்களினால் - தாத்தா பேத்தி தாலாட்டு 7

சின்னஞ்சிறு விரல்களினால்
எனை பிடிக்கும் தருணத்திலே - நீ
எனை பிடிக்கும் தருணத்திலே
சின்ன இதயம் விரிந்ததடி
சிரித்து மகிழும் பொழுதினிலே - எந்தன்
சின்ன இதயம் விரிந்ததடி
சிரித்து மகிழும் பொழுதினிலே
சிரித்து மகிழும் பொழுதினிலே
சின்னஞ்சிறு விரல்களினால்
எனை பிடிக்கும் தருணத்திலே - நீ
எனை பிடிக்கும் தருணத்திலே

சின்னஞ்சிறு கால் எடுத்து
எனை உதைக்கும் அழகினிலே - நீ
எனை உதைக்கும் அழகினிலே -
சின்ன விழிகள் மலர்ந்ததடி
எந்தன் பொழுதும் புலர்ந்ததடி - உந்தன்
சின்ன விழிகள் மலர்ந்ததடி
எந்தன் பொழுதும் புலர்ந்ததடி –
எந்தன் பொழுதும் புலர்ந்ததடி
சின்னஞ்சிறு விரல்களினால்
எனை பிடிக்கும் தருணத்திலே - நீ
எனை பிடிக்கும் தருணத்திலே

சின்னஞ்சிறு குரலினிலே
குயிலின் கீதம் ஒலிக்குதடி - உந்தன்
சின்னஞ்சிறு குரலினிலே
குயிலின் கீதம் ஒலிக்குதடி
சின்ன இதழ்கள் ஓரத்திலே
புன்னகையும் அரும்புதடி - உந்தன்
சின்ன இதழ்கள் ஓரத்திலே
புன்னகையும் அரும்புதடி -
மின்னலாய் மறைந்தடி

சின்னஞ்சிறு உலகம் இன்று
உன்னை சுற்றி' வருகுதம்மா - எந்தன்
சின்னஞ்சிறு உலகம் இன்று
உன்னை சுற்றி' வருகுதம்மா -
சின்னசிறிய மழலைமொழி
இன்பமழை பொழியுதம்மா -உந்தன்
சின்னசிறிய மழலைமொழி
இன்பமழை பொழியுதம்மா

சின்னஞ்சிறு விரல்களினால்
எனை பிடிக்கும் தருணத்திலே - நீ
எனை பிடிக்கும் தருணத்திலே
சின்ன இதயம் விரிந்ததடி
சிரித்து மகிழும் வேளையிலே - எந்தன்
சின்ன இதயம் விரிந்ததடி
சிரித்து மகிழும் வேளையிலே
சின்னஞ்சிறு விரல்களினால்
எனை பிடிக்கும் தருணத்திலே - நீ
எனை பிடிக்கும் தருணத்திலே


இதன் காணொளி யூடுபே (youtube

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (8-Sep-21, 4:27 pm)
பார்வை : 157

மேலே