இலவசமே

கட்டிலில் போட்டுக் கடைந்தெடுக் கின்றக் கடும்பிணியாம்
தொட்டிலில் பிள்ளைத் துடித்தழப் பால்மா தொடர்பிலையாம்
பட்டினிச் சாவைப் பரிசென நீட்டப் பயமிலையாம்
எட்டடி மட்டும் இறுதியி லிங்கே இலவசமே

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (13-Sep-21, 1:42 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 33

மேலே