நம்புங்கள்

நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது,
முன்னோர்கள்
சொல்லி விட்டார்கள்...
எனவே

நம்புகிறேன்,
ஒவ்வொரு ஆணின்
வெற்றிக்குப் பின்
ஒரு பெண் இருப்பாள்...
என்பதை‌.

இன்னொன்றையும்
நீங்கள்
நம்பித்தான்
ஆக வேண்டும்,

சொல்வது நான்,
எனவே
விளையாட்டல்ல,

தோல்வியுற்ற
ஆணுக்குப் பின்
நிச்சயமாய்
ஒரு மிக மிக
அழகான காதல்
இருக்கும்...‌!

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : (14-Sep-21, 4:40 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : nambungal
பார்வை : 56

மேலே