புன்னகையின் நினைவு புதியவிடியல் எனக்கு

கனவில் மலர்ந்து கவிதையில் நடந்தாய்
மௌனத்தில் பேசி மனத்தைத் தொடர்ந்தாய்
மாலை நினைவில் நித்தம் வருகிறாய்
புன்னகையின் நினைவு புதியவிடியல் எனக்கு

----இயல்பாய்


கனவில் மலர்ந்து கவிதையில் நடந்தாய்
மனதைத் தொடர்ந்தாய் மௌனத்தில் பேசி
நினைவில் மாலையில் நித்தம் வருகிறாய்
நினைவில் உன்புன்னகை புதியவிடியல் எனக்கு
----கலி விருத்தமாய்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Sep-21, 9:42 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே