அன்பில் அவிந்த பிட்டு

அன்பில் அவிந்த பிட்டு.

என் வீட்டில்
பார்த்ததில்லை,
எங்கு தேடியும் கிடைத்ததில்லை,
என்ன அது, ஏது என்று
கேட்டால்,
என் தங்கை வீட்டு
பிட்டு என்பேன்.

எனக்கு பிடித்த பிட்டு,
என் அண்ணனுக்கும்
பிடித்த பிட்டு,
அவனும் நானும் ருசித்த
பிட்டு,
அன்பினால் அவித்த
பிட்டு.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (19-Sep-21, 8:26 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 67

மேலே