பயணிகள் கவனிக்கவும்

மனிதா நம் வாழ்க்கை என்பது
இரயில் பயணத்தைப்போல்

நாம் எல்லோரும் அதில்
பயணம் செய்ய
பூமியில் பிறந்துள்ளோம்

நம் வாழ்க்கை பயணத்தில்
இன்பங்களும், துன்பங்களும்
மாறி மாறி நம்முடன்
பயணம் செய்யும்

பயணம் செய்யும் போது
நம்முடன்
உறவுகள் என்றும்
நண்பர்கள் என்றும்
சிலர் ஏறிக்கொண்டு
பயணம் செய்வார்கள்

அதில் சிலர் நமது பயணம்
முடியும்வரை நம்மோடு
பயணம் செய்வார்கள் ...!!

சிலர் இடையில்
தங்கள் பயணத்தை
முடித்து கொண்டு
விடை பெறுவார்கள்...!!

இணையாத
தண்டவாளத்தின் மீது
ஓடும் இரயில் போல்தான்

இன்ப துன்பம் என்னும்
தண்டவாளத்தின் மீது
நம் வாழ்க்கை பயணம் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (19-Sep-21, 9:30 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 64

மேலே