எழில் கொஞ்சும்

எழில் கொஞ்சும் உன்னழகாலே
விழியில் பசுமை சூழ்ந்து வாழ்வும் வளமானதடி..

கோடை கொடுக்கும்
வெப்பத்திலும் குளிருதே புள்ள என்ன ஏதுவென்று புரியலடி....

மழைக் கொட்டி தீர்த்த பின்னும்
வெட்டவானில் தவழும் வெண்மேகம்
என்னெ அழகடி...

இரவு கழண்டு விழுந்த பின்னும்
இருக்கும் அதிகாலை கருமேகம் எவ்வளவு அழகடி..

பகல் புரண்டு கருத்த பின்னும்
தோன்றும் அந்திமாலை செம்மேகம்
அவ்வளவு அழகடி..

வெயிலோடு தூறும் மழையில்
வானோடு தோன்றும் வானவில்
அழகில் என்னென்ன வண்ணமடி...

முத்துச்சுடர் நிலவொளியும்
அதுபோல்
கண்ணுக்கு தென்படும் பெண்அவள்
முகமும் எத்தனை பொருத்தமடி...

தீமூட்டும் கதிரவன் கரையும் போது
தீயும் அணையும்
அதுவாக
அன்பூட்டும் மன்னவன் கரையும் போது
அவளின் அந்த கர்வம் கலையுதடி....

பூங்காற்று வீசிடும்
அது தாலாட்டு பாடிடும்
அவள் பேசும் மௌனமுமாகிடும்
அதுபோல தானடி...

எழுதியவர் : BARATHRAJ M (19-Sep-21, 8:33 pm)
சேர்த்தது : BARATHRAJ M
Tanglish : ezil konchum
பார்வை : 61

மேலே