நினைவுகள்

நினைவுகள்
என்பவை
இறந்த கால
எச்சங்கள்..

ஏதோ
ஒரு தருணத்தில்
இரயிலில்
ஊர் திரும்பிக்
கொண்டிருந்தேன்...

சில மணி நேரங்களில்
முடிந்துவிடக் கூடியவை
இரயில் சிநேகங்கள்...

ஆனால்

எனக்கு அப்படி
தோன்றவில்லை.
காரணம்,
எதிர் இருக்கையில்
ஒரு பெண்...

என் வயதிருக்கலாம்,
மிக அழகாக இருந்தாள்.

என்னையே
உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

எவ்வளவு தான்
தைரியமானவன் என்றாலும்,
உற்று பார்க்கும்
அறிமுகமில்லா பெண்ணிடம்
பேசுவது அத்தனை
எளிதானதா.‌..?

எனக்கும்
சுவாரஸ்யம்
வந்தாலும்,

அமைதியாக இருந்தேன்,
அவளே பேசட்டும்.

அவள் பக்கத்தில்
ஒரு 6வயது
ஆண் குழந்தை.

அவள்
குழந்தையாய்
இருக்காது...
இருக்க கூடாது
என்
வேண்டிக் கொண்டேன்
இறைவனை ‌..

எங்கிருந்தான்
வருவானுங்களோ,
திடீரென
ஒரு பழைய நண்பன்
அருகில்
அமர்ந்தான்.

கல்லூரி தோழன்,
ஏதேதோ பேசினான்.
நான்கு மணி நேரங்கள்
அறுத்து தள்ளினான்.

ஒரு வழியாக
அவன் இறங்க வேண்டிய
ஊர் வந்தது...
(இல்லை)
இரயில்
வந்து சேர்ந்தது...

நிம்மதியுடன்
அவளை பார்த்தேன்.
ஆனால் பேசவில்லை
அவளும்...

பத்து நிமிடங்கள்
ஆகி இருக்கலாம்...

அவள்
தன் குழந்தையுடன்
இறங்க தயாரானாள்.

திக்கென்றது எனக்கு...

இறங்க போறீங்களா....?
முதன் முறையாக
அல்லது
கடைசி முறையாக
அவளிடம் பேசினேன்.

ஆமாங்க...
நீங்க தினேஷ் தானே...?
என்றாள்.

1357 வோல்ட் மின்சாரத்தில்
ஷாக் அடித்தால்
எப்படி இருக்கும்...?
அப்படி இருந்தது
எனக்கு....

ஆமா...
உங்களுக்கு
எப்படி தெரியும்...?

டேய்...
நான் சசிகலா...
திருச்சில
உன் எதிர் வீட்டுல இருந்தோமே...

எனக்கு
எப்படி
இருந்திருக்கும்...?

இது
என் பையன்...
அவர் ஸ்டேஷன்ல
வெயிட் பண்ணிட்டிருப்பார்.
நீ
எப்படி இருக்க
என்றாள்...

சம்பிரதாயத்துக்கு
பிறகு,

விழுப்புரத்தில்
இருக்கோம்
உன் நம்பர் குடு
என்றாள்..

அதற்குள்
அந்த குட்டி பையன்,
அம்மா...
இது
அறிவு மாமா தானே...
என்று கேட்டான்
யாரையோ நினைத்து கொண்டு...

காரணம்
தெரியவில்லை...
நட்பை தொடர்
விருப்ப வில்லை..
முடிய வில்லை...
ஏனென்றும்
தெரியவில்லை.

ஏதோ ஒரு
அலைபேசி எண்ணை
சொன்னேன்.
அவளும் நம்பி
அதை
சேமித்து கொண்டாள்.

தன் பையனிடம்
சொன்னாள்..

இவர் அறிவு மாமா இல்லடா...

மாமா என்ற
வார்த்தை
என் காதில்
விழவே இல்லை...

எனக்கு இப்படி கேட்டது...

"இவருக்கு அறிவு இல்லடா...."

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : (19-Sep-21, 8:34 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : ninaivukal
பார்வை : 63

மேலே