என்னைத் தினமும் அழற்சியாக்க

கொள்ளையும் திருட்டும் பொய்யும் - தினமும்
ஆதவன் தோன்றும் முன்பே அரங்கேறுகிறது

வெட்கமோ பயமோ பாபமோ எதையும்
கருதாமல் இருப்பதை எடுக்கவே பலர்கூட்டமாய்

ஆணும் பெண்ணும் என்றும் அனைத்துவகை
தொழில்கள் செய்வோர் அரசியலர்கள் என்றும்

சிறுதுளையால் குடத்து நீரெல்லாம் கசிவதைப்போல்
பலத்துறைகள் பணத்தை பறிக்கின்றன நூதனமாய்

தவறினை தெளிவாய் அறிந்த ஆளுமரசுகளும்
தடுக்காமல் அறிக்கை விட்டுவிட்டு அக்கரையின்றி

அரசின் ஊழியர்களை அசிங்கப்படுத்தும் ஆட்சியாளர்கள்
அதுவே உண்மையென எண்ணும் நாட்டினர்

முதுகெலும்பு விவசாயம் நூறுநாட்கள் வேலையால்
பெரியளவில் புற்றுநோய் பீடிக்கப்பட்டு சிதைவில்

தொலைக்காட்சி கைப்பேசி கணினி ஆகியவையே
மக்களின் தோழனாய் மானிடத்தை சிதைத்தபடி

ஆதங்கமே என்னைத் தினமும் அழற்சியாக்க
ஆனாலும் அவைகளில் ஆளுமையால் உருக்குலைந்தே.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (20-Sep-21, 8:01 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 79

மேலே