கோலத்தின் புள்ளி மட்டும் அங்கே காண்கிறேன் அக்கா

"**லேய் நா சொல்லுறத
முதல்ல நீ கேலு.... என்று
எனக்கு மூத்தவள் நீ அதட்டும் பொழுது என்னுடன் என் அறையும் சிறிது நேரம் உன் மீது கோபித்துக் கொள்ளுமே அக்கா....
**கதவையும உன் கைகளால் நீ தண்டிக்கையில் அதனுடன் சேர்ந்து நான் அடி வாங்கி அழுவேனே.... அதை கண்ட நாட்காட்டியும் நகைத்து கொண்டு மறுநாள் திரும்ப அடம்பிடிக்குமே ஆருயிரே....
அதற்கு இப்போது ஆறுதல் கூறி நான் எப்படி தேற்றுவேன் அதை...
**தொலைக்காட்சியின் ரிமோட்டும் அவ்வப்போது சிறு சிறு சண்டையிட்டு என்னை உடைக்க மாட்டீர்களா என தானாக தரையில் விழுந்து அடம்பிடித்து உடைவதை கண்டேனே நான் எவ்வளவு கூறியும் கள்ளச்சியே....
**இது யாவையும் காட்டிலும் கண்ணாடியில் தினமும் உனது வண்ண பொட்டுகளால் வண்ணமுக கோலமிடுவாயே இப்போது கோலத்தின் புள்ளி மட்டும் அங்கே காண்கிறேன்.... கண்ணாடியும் உன் வரவேற்பை வேண்டி அதை நான் காண்கையில் உன் முகம் காட்டி மன்றாடுகிறது என்னிடம்...
**இப்பொழுதும் இந்நொடி தேய்கின்ற நேரத்தில் நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் உன்னை எந்நேரமும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என்னுள்..**"

எழுதியவர் : சிவபார்வதி (20-Sep-21, 11:04 pm)
சேர்த்தது : சிவபார்வதி
பார்வை : 124

மேலே