கண்ணனின் அழகு

கண்ணா கதிர்மதியம் போல் முகத்தோனே
உன்னழகில் மதிமயங்கி நான் உன்னழகை
எப்படி சொல்வேன் என்று தெரியாது
விழிக்கையிலே உன்சிரிப்பில் உன்கண்ணழகில்
உன்னுள் பாதியாய் இருக்கும் ராதையைக் கண்டேன்
கண்ணா நீ பேரழகி ! ராதையைப்போல் !
கண்ணா உன்வடிவழகில் புருடோத்தமன் நீ
வில்லேந்திய ராமனாய், இரணியனை வதைத்த நரசிம்மனாய்
கோபத்தில் சத்திரிய குலத்தையே அளித்த பரசுராமனாய்
பக்தரை ரட்சிக்கும் பக்த வத்சலனாய்
புன்முறுவல் பூத்த உன்தாமரை முகத்தில்
நான் காண்பது இலக்குமியின் வாத்சலியம்

கண்ணா என்மனதில் நிறைந்துநிற்கும் மாதவா
உருவாய் ஒளியாய் அருவாய் ஆனாய் பெண்ணாய் அலியாய்
எல்லாம் நீயே புருடோத்தமன்நீ மோகினியும் நீயே அல்லவா
கண்ணா கண்ணாற் கண்ணா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Sep-21, 1:44 pm)
Tanglish : kannanin alagu
பார்வை : 30

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே