வருடிச் செல்ல

வருடிச் செல்ல

மனம் எனும்
பூச்செடி மேல்,
இளமைக் காற்று
வருடிச் செல்ல,
பூக்குமே பூ ஒன்று!
அந்தப் பூவிற்கு
என்ன பெயர்?

அந்தப் பூவை
பறித்து செல்ல,
வருவாளோ/னோ எனக்
காத்திருக்க,
வந்தவளே/னே!
விரும்பியே
பறித்துச் செல்.

பறித்த பூ அதனை,
வாடாமலே பார்த்து
விடு,
உன் கண்களின்
இரு மணி போல.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (21-Sep-21, 4:12 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 77

மேலே