கண்ணனின் குழல்

கண்ணன் குழலூதுகின்றான் அவன் கையில் அந்த
குழல் ..... தாவர இனத்தில் ஒதுக்கப்பட்ட புல்லினம்
மூங்கில் அதிலிருந்து உதித்த குழல் பெண்ணாவாள்
முரலி அவள் பெயர் ...... கண்ணனுக்கு ராதை எப்படியோ
அப்படியே அவன் கையின் அலங்காரம் முரலி; அவன்
குவிந்த கொவ்வாயில் ஓதிட மோஹன இசையாய்
மாறுகிறாள் முரலி கண்ணனின் இச்சைக்கு இனியவளாய்
அவன் வருடலில் தன்னை மறந்து ஏழிசையாய் மாறி
எழுஉலகம் மயங்கி கண்ணன் காலடியில் சேர்க்கும்
மோஹன மங்கை அல்லவோ இவள் முரலி
என் கண்ணனின் வேய்ங்குழல் ......ஐயோ ....கண்ணா நான்
என்ன பாவம் செய்தேன் உந்தன் குழலாய் இருக்க
கொடுத்து வைக்க வில்லை என்று அழுகிறாள்
கோகுலத்தில் அங்கோர் கோபிகை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Sep-21, 6:30 pm)
Tanglish : kannanin kuzal
பார்வை : 39

மேலே