மௌனனம் கலையாத சிரிப்பில்

புன்னகையில்
ஒரு கவிதைப் புத்தகத்தை
திறந்து வைக்கிறாய்

விழிகள் கவிந்து
அந்தியின் அழகினை
விடியலிலே கொண்டு வருகிறாய்

தென்றல் கூந்தல் கலைத்திட
தேன் சுமந்த இதழ் ஏந்தி
வான் மழைபோல் வருகிறாய்

மௌனனம் கலையாத
சிரிப்பில் மனதை
மெல்ல மெல்ல வருடுகிறாய்

அழகு ஆலாபனை செய்யும்
ஆனந்த ராகமே

எழுதியவர் : கவின் சாரலன் (21-Sep-21, 6:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே