அயச் சிந்தூரம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அயத்தி(ல்)வரு சிந்தூரம் ஐயமொடு சோபை
வயிற்றிலுறு காமாலை மாற்றும் - புயத்திற்குச்
செய்யபலம் உண்டாக்குந் தீபனத்தைத் தான்எழுப்பும்
வெய்யபாண் டோட்டுமிது மெய்

- பதார்த்த குண சிந்தாமணி

இச்செந்தூரம் கப நோய், வீக்கம், காமாலை, பித்த பாண்டு இவற்றை நீக்கும்; உடல்பலம், பசி இவற்றை யுண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Sep-21, 8:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 4

மேலே