அறிவும் காசும் அற்பம் - கலிவிருத்தம்

காற்றை விழுங்கியே வாழும் உயிர்கள்
சேற்றின் பதத்தில் வேரின் புதைவுகள்
ஆற்றினால் மட்டுமே ஆக்கும் மணல்கள்
ஆற்றல் குறையா ஆதியின் புவியில் --- (1)

சிறிது நேரமே வாழும் உயிராம்
அறமிலா மனிதனின் ஆசையின் கூறால்
அறமிகு புவியின் கோளத்தில் சிதைவு
வெறுத்து பூமியும் வெடித்து பொங்கும் --- (2)

சிதைந்து உயிர்கள் யாவும் புதையும்
மிதக்கும் நீரில் எரியுமே யாவும்
பதுங்கக் கூட வழிகளும் இன்றியே
பதைபதைப் பினாலே உயிர்களும் மாயுமே --- (3)

அறிவும் காசும் அற்பம் ஆகுமே
அறிவியல் கலன்கள் இயங்கா நிலையில்
பொறியியல் எல்லாம் பொய்த்தே போகுமே
குறுகிய நேரத்தில் குன்றும் உருகும் --- (4)

எண்ணிப் பார்த்தால் இந்நிலை புரியும்
மண்ணின் மகத்துவம் வானிலும் உயர்ந்தது
தண்ணீர் என்பது கதிரவன் கொடையது
கண்னென பூவியைக் காப்பது கடமையே.--- (5)
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (25-Sep-21, 7:04 am)
பார்வை : 78

மேலே