பசுநெய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தாக முழலைசுட்கஞ் சர்த்திபித்தம் வாயுபிர
மேகம் வயிற்றெரிவு விக்கலழல் - மாகாசங்
குன்மம் வறட்சி குடற்புரட்ட லஸ்திசுட்கஞ்
சொன்மூலம் போக்குநிரைத் துப்பு

- பதார்த்த குண சிந்தாமணி

இது தாகம், உழலைப்பிணி, அதிசுட்கரோகம் வாந்தி, பித்தம், வாதவிடம், பிரமேகப்புண், வயிற்றெரிவு, பித்த விக்கல், இருமல், வயிற்றுவலி, சினைப்பு, குடல் நெளிதல், சுரம், சோம்பல், மூலரோகம் ஆகிய இவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Sep-21, 8:31 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே