மனம் மந்தியல்ல

மனம் மந்தியல்ல.

மந்தி🐒என்பார் உன்னை,
மந்தி இல்லை என்பேன் நான்.

"நல்ல மனம்💖 உடையார்
நறு மணம் வீசும் மலர்🌺
என்பேன் நான்,
மறுப்பவர் யாரும்
உண்டோ?

"மனம் வைத்தால்❓
முடியும்"
மனத்தின் மகிமை
உணர்த்தும்
மந்திரமன்றோ!

மந்தியால் முடியுமா
பிரபஞ்சம் சுற்றிவர?
ஒலியாலும் முடியாது,
ஒளியாலும் முடியாது.

மனம் முடித்து வைக்கும்
கண் இமை வெட்ட முதல்,
இப்ப சொல்லு யார்
உயர்த்தி என்று?
மனமா மந்தியா?

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : வாழ்க்கை (25-Sep-21, 9:17 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 54

மேலே