கணவன் மனைவி

நேரிசை வெண்பா

ஆராமீன் வாங்கியாக்கு மத்தியானம். சாப்பிட
சீராக்கி வையெனக் கென்றானாம் ---. ஆராமீன்
ஆக்கி ருசிக்க யவளேத்தின் றாம்பளையைக்
காக்காவா ராவென்றா ளாம்

கணவன் மனைவியிடம் . ஏரியில் ஆராமீன் விற்பனை நடக்கிறது. வாங்கி மத்தியானம்
சமைத்துவை என்று சொல்லிப் போனானாம்
மிகவும் நல்ல செய்தியாகும். ஏரியின் ஆரா மீன்கள் migavumt ருசியாக இருக்கும் என்பார்கள்.
இதற்கு ஒரு கதைகூட சொல்லுவார்கள். கணவன் ஆராமீனை வாங்கித் தந்து p மத்தியான
சாப்பாட்டுக்கு செய் என்றானாம். மனைவி சமைத்து வைத்து காத்திருநதாளாம். கணவர் வரததாமத
மாக அவள் மட்டும் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தாளாம். கணவன் இன்னும் வரவில்லை. ஆராமீனின்
ருசியிவளைச் சுண்டி யிழுக்க கொஞ்சம் கொஞ்சமாக மொத்த மீனையும் அவளே சாப்பிட்டு வெறும் குழம்பை
மட்டும் கணவனுக்கு வைத்தாளாம். கணவன் அன்றிரவு திரும்பி வந்து சாப்பிட மீனை ஏன் வைக்கவில்லை
என்று கேட்டானாம். அதற்கு மனைவி என்ன சொன்னாள் தெரியுமா ". எதிர்வீட்டு ஆண்டாளு ஆரா மீனு
ஆம்பிளைக்கு ஆகாது கொடுக்காதேன்னு சொன்னா அதனாலே நானே சாபிட்டுட்டேன் "" என்று சொல்லி
சமாளிச்சாளாம். அப்படி இனிப்பு சுவையுடன் இருக்குமாம் ஆரா மீன்

எழுதியவர் : பழனி ராஜன் (26-Sep-21, 11:32 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kanavan manaivi
பார்வை : 89

மேலே