மரமாய் பிறப்பதே தூய்மை

எனது குருதியின் வேகத்தை என்னால்
கட்டுப்படுத்த இயலவில்லை ஆனால்
நானே ஊராருக்கு தலைவன்.

எனது முடிகள் கொட்டுவதை என்னால்
நிறுத்த இயவில்லை ஆனால்
நானே சிறந்த மருத்துவன்

எனது நகத்தின் வளர்ச்சியை என்னால்
மாற்றவே இயலவில்லை ஆனால்
நானே சிறந்த வாசியோகி

எனது மனமுழுதும் காமத்தின் எண்ணங்களே
ஆனால் பளிச்சென்ற என்ற உடையுடன்
பவித்திர ஆலோசனை கூறுபவனாய்

அறிவின் வளர்வே அனைத்தையும் பிழையாக்க
மண்ணாய் நீராய் நெருப்பாய் காற்றாய்
அல்லது மரமாய் பிறப்பதே தூய்மை.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-Sep-21, 7:39 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 119

மேலே