நிழல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மேனி தடிக்கும் விவர்ன்னவழ குண்டாகும்
போனவலி வாதமந்தம் பூரிக்குந் - தானே
வளர்ந்தேறுஞ் சோம்பல் மதிவதன மாதே
குளிர்ந்த நிழலின் குணம்

- பதார்த்த குண சிந்தாமணி

உடல் பருமனாகும்; அழகு பெறும்; வாத, மந்தம், சோம்பல் இவை கூடும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Sep-21, 3:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே