கண்கள் இருண்டால்
கண்கள் இருண்டால்
பக்கம் 13
புதிய கட்சி ஆரம்பித்தாகிவிட்டது பொதுக்குழு கூட்டத்தில் வள்ளி அக்கட்சியின் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வரும் தேர்தலில் நிச்சயம் ஆட்சியை கைப்பற்றி மாநிலத்தில் உயர்ந்த அதிகாரமான முதல்வர் பதவியில் தான் அமரப்போவதை நினைத்து மனக் கோட்டையில் மிதந்து கொண்டிருந்தாள் வள்ளி. பணக்காரர்களுக்கு உரிய திமிரும் கர்வமும் அவளுக்கு எந்த இடத்திலும் குறைந்ததாக இல்லை.
பணம் இருந்தால் எதையும் வாங்கி விடலாம் என்ற மனநிலையில் அவள் எப்போதுமே யாரையும் மதிப்பதும் இல்லை கண்டு கொள்வதும் இல்லை.
அவள் தந்தை ரங்கா பல விதங்களில் பல தொழில்கள் செய்து பல இடங்களில் முறைகேடாக சேர்க்கப்பட்ட பணம் பதுங்கி கிடந்தன அவற்றையெல்லாம் வெளியே கொண்டு வந்து அரசியலில் அள்ளி எறிந்தார்.அதனால் கட்டுக்கடங்காத கூட்டமும் மக்கள் செல்வாக்கு இருப்பது போல் பொதுக்கூட்டமும் கட்சி அலுவலகம் முன்பு மக்கள் வெள்ளம் அலை மோதின. பல கட்சிகளுக்கு இது சற்று கலக்கத்தை உருவாக்கின
ஊடகங்கள் முழுவதும் அந்த மேடையை சுற்றியிருந்தன புதிய கட்சி புதிய கொள்கை புதிய தலைவர்கள் என பேட்டி எடுக்க காத்துக்கொண்டிருந்தனர்.ஆனால் யாரும் வள்ளியின் பக்கத்தில் நெருங்காதவாறு அவரது காவலர்கள் பாதுகாப்பாக நின்றனர் ஒருவழியாக கட்சி கூட்டம் முடிந்தது அடுத்ததாக தனியாக ஒரு ஊடக சந்திப்பு எல்லோருக்கும் பேட்டி தருவதாக வள்ளி ஒலிபெருக்கியில் அறிவித்துவிட்டு வீடு திரும்ப தயாரானாள்...
அபில்லோ மருத்துவமனை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கிக்கொண்டிருந்தது டாக்டர் சரவணன் அருகில் ரித்திக் அமர்ந்திருந்தான்.
என்னப்பா வேலை எல்லாம் எப்படி போகிறது என்று டாக்டர் சரவணன் கேட்க..
பரவால்ல டாக்டர் இப்பதான் கொஞ்சம் கொஞ்சம் வெளி நோயாளிகள் பார்க்க ஆரம்பித்து உள்ளேன். விரைவில் அறுவை சிகிச்சை பிரிவில் என்னை மாற்றி விடுங்கள் என்று ரித்திக் சொல்ல..
கண்டிப்பா கொஞ்சம் பொறுமையாக இரு!! அவசரப்படாதே நேரம் வரும்போது கண்டிப்பாக அறுவை சிகிச்சை பிரிவில் மாற்றி விடுகிறேன்.
அதற்கு முன் நீ நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி ஒரு நிமிடம் இரு என்று கூறிவிட்டு தனது அறையில் இருந்த 10 பெரிய புத்தகங்களை அவனிடம் கொடுத்து இதையெல்லாம் கொஞ்சம் படித்துப் பார் என்று சொல்கிறார்.
ரித்திக் அந்த புத்தகத்தை பார்க்கும்போதே தலை சுற்றுகிறது அவ்வளவு பெரிய புத்தகம் இதை நாம் எப்போது படித்து முடித்து இவர் இப்போது நம்மை அறுவை சிகிச்சை பிரிவில் மாற்றுவார் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு முகத்தில் புன்னகை யோடு அதை வாங்கிக் கொள்கிறான்.
ஒவ்வொன்றாக எடுத்து அதன் தலைப்புகளை வாசித்து பார்க்கிறான் அத்தனையும் ஒன்று சம்பந்தப்பட்டவை. ஆம் அது அத்தனையும் கண்கள் மாற்று அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்ட புத்தகங்கள்.
சரி டாக்டர் என்று நன்றி சொல்லிவிட்டு அந்தப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு தனது அறையை நோக்கி நகர்கிறான் ரித்திக்.
டாக்டர் சரவணன் தனது லேப்டாப்பை திறந்து வீடியோ காலில் இணைகிறார் மறுமுனையில் லண்டன் மருத்துவர் ரேஞ்சர்ட் .
ஹாய் டாக்டர் ஒர்க் எல்லாம் எப்படி போகுது என்று சரவணன் கேட்க..
நல்லா போகுது . நம்ம பிராஜக்ட் எப்படி போய்க்கொண்டிருக்கிறது அடுத்தவாரம் ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு புதிய டாக்டர் நம்ம ப்ராஜெக்டில் சேரப்போகிறார் அவருக்கு நம் ப்ராஜெக்ட் பற்றி கொஞ்சம் விளக்கி சொல்ல வேண்டும் என்று டாக்டர் ரேச்சர்ட் சொல்ல
" பிராஜெக்ட் நல்லா போகுது டாக்டர் இப்பதான் இன்னொருத்தர் தயார் பண்ணுகின்ற வேலையில் இறங்கி இருக்கிறேன் எப்படியும் இன்னும் சில மாதங்களில் அவன் தயாராகி விடுவான் நாம் அவனையும் இணைத்துக்கொள்ளலாம்" என டாக்டர் சரவணன் சொல்ல..
வெளியாட்கள் யாரையும் நமது பிராஜெக்ட் இல் சேர்க்க வேண்டாம் உங்களுக்கு மிகவும் நம்பிக்கையான அவர்களை மட்டுமே சேருங்கள் நாம் பண்ணுகின்ற ப்ராஜெக்ட் சிறிதளவுகூட வெளியே கசிந்து விடக்கூடாது என டாக்டர் ரேச்சர்ட் கடுமையான குரலில் சொல்ல..
" நிச்சயமாக டாக்டர் இந்த நபர் எனக்கு நூற்றுக்கு இருநூறு சதவீதம் நம்பிக்கையானவர் நீங்கள் அதைப்பற்றி ஏதும் கவலை கொள்ள வேண்டாம் கூடிய விரைவில் உங்களிடம் அவரை அறிமுகப் படுத்துகிறேன்" என்று சொல்லி விட்டு வீடியோ கால் இணைப்பைத் துண்டிக்க டாக்டர் சரவணன்.
டாக்டர் சரவணன் மொபைல் அலற அதை எடுக்கிறார். மறுமுனையில் வழக்கமாக அரசு மருத்துவமனையில் இருந்து பேசும் நபர்
"டாக்டர் இப்போதுதான் ஒரு ஆக்சிடெண்ட் கேஸ் வந்தது ஐந்து பேரும் காலி நீங்கள் உடனே வந்தீங்கன்னா எடுத்து விடலாம் என்று கூற "
இதோ 15 நிமிடங்களில் அங்கு வந்து விடுவேன் என்று சொல்லிவிட்டு ஐந்து சிறிய பெட்டிகளை எடுத்துக்கொண்டு அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தார் டாக்டர் சரவணன்.
சரவணன் வேலை முடிந்து வீடு திரும்பினார் டாக்டர் கொடுத்த புத்தகங்களை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். எல்லா புத்தகங்களும் விலையுயர்ந்த புத்தகங்கள் மேலும் அது இந்தியாவில் எங்கும் கிடைப்பது இல்லை இந்த புத்தகங்களை எல்லாம் டாக்டர் எங்கிருந்து வாங்கிருப்பார் என்று யோசித்துக் கொண்டு ஒவ்வொன்றாக அலமாரியில் எடுத்து
வைத்துக் கொண்டிருந்தான்.
அதன்பின் சிறிது யோசித்து விட்டு அலமாரியில் இருந்து அனைத்து புத்தகங்களும் எடுத்து பெட்டியில் வைத்து லாக் செய்து கொண்டான்.
காரணம் அவன் தங்கி இருப்பது அவன் நண்பர்களுடன் அவனும் மருத்துவர் அவன் இன்னொரு மருத்துவமனையில் வேலை செய்கிறான் ஒரு வேலை அந்த புத்தகங்களை பார்த்தால் அவன் கேட்கக்கூடும்.
மேலும் டாக்டர் சரவணன் முன்பு சொன்னது அவன் மனதில் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது " நான் உனக்கு தரும் எதையும் நீ மற்றவர்களுடன் பகிர கூடாது மேலும் நான் உன்னிடம் பேசும் எந்த விஷயங்களையும் வெளியே மற்றவர்களோடு விவாதிக்கக் கூடாது நாம் இருவர் பேசும் விஷயங்கள் நமக்குள் மட்டுமே இருக்க வேண்டும் "என்று கண்டிப்பாக அவர் சொன்னதை நினைத்து பார்க்கிறான்.
மொபைல் அலற எடுத்து பார்க்கிறான் மறுமுனையில் பவித்ரா.
"என்ன சார் எப்படி இருக்கீங்க ஞாபகம் இருக்கா " என்று கேட்க
அதெல்லாம் இருக்கு நீ எப்படி இருக்கிறாய் என்று இவன் கேட்க
உரையாடல் ஆரம்பித்து நீண்டு சென்று கொண்டிருக்கிறது அந்த சொல்லப்படாத காதல்.
பவித்ராவை பொருத்தவரை நேரம் வரும்போது சொல்லிவிடலாம் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள் ரித்திகா பொருத்தவரை அவனுக்கு உள்ளே ஆசை இருந்தாலும் அதற்கு தான் தகுதியானவன் அல்ல என்பது அவனுடைய எண்ணம். பணத்திலும் குடும்பத்திலும் எதிர்மறை யானவர்கள் இவர்கள்.
ரித்திக் பொருத்தவரை பணத்தை ஒருவகையில் எப்படியோ சம்பாதித்து விடலாம் ஆனால் குடும்பத்தைப் பொறுத்தவரை இவன் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வளர்ந்தவன் அவளுக்கு சுற்றமும் உறவுகளும் அதிகம்.
ஆரம்பகாலத்தில் அவள்மீது இவனுக்கு காதல் என்னும் வந்தபோதே சற்று விலகி சென்றான் ஆனால் எவ்வளவு தவிர்த்தும் ஏதோ ஒரு வகையில் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் இயற்கையையும் இவர்கள் இருவரையும் பிரித்து விடாமல் விட்டு வைத்து இருக்கிறது.
சொல்லப்படாத காதல் இன்றும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
தனக்கென்று இருப்பவர்கள் இருவர்தான் ஒன்று ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் பாதிரியார் மற்றும் டாக்டர் சரவணன் இவர்கள் இருவர்காக எதையும் செய்யும் மனநிலையிலும் அவர்கள் மீது அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டவனாக ரத்திக் இன்றும் இருக்கிறான்.ஆரம்பத்தில் காதல், கல்யாணம் என்று எதிலும் நம் வாழ்வில் கலந்து விடக்கூடாது என்றும் வாழும் வரை தனியாக இருந்து விடலாம் என்று தான் மனதில் உறுதியாக இருந்தான் அந்த உறுதியை உடைத்து காதல் மலர காரணமாயிருந்தது பவித்ராவின் வருகை.
எவ்வளவு தவிர்த்தும் தவிர்க்கமுடியாத ஒரு அன்பின் உயர்நிலையாக இந்த உறவு தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இரண்டு மணி நேரங்களுக்கு பின் உரையாடல் நிறைவுக்கு வருகிறது.
சரி நீ ஒரு முறை கோயமுத்தூர் என்று சொல்லிவிட்டு போனை துண்டிக்கிறாள் பவித்ரா.
அரசு மருத்துவமனையின் டாக்டர் சரவணன் எல்லாவற்றையும் முடித்துவிட்டு வெளியே வருகிறார் அவரது கைகள் அந்த ஐந்து சிறிய பெட்டிகளை எடுத்துக்கொண்டு வழக்கமாக வரும் பிணவறை ஊழியர்கள் இந்த முறையை ஐந்து பேர் கொஞ்சம் பார்த்து செய்யுங்கள் என்று சொல்ல
" கோட் பாக்கெட்டில் இருந்து செக் புக் எடுத்து ஒரு உயர்ந்த தொகையை நிரப்பி இந்த பணத்தை வங்கியில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஊழியரிடம் டாக்டர் சரவணன் அந்த செக் யை கொடுத்துவிட்டு ,
இந்தப் பணம் நீங்கள் சொன்ன தகவலுக்காக அல்ல இந்த விஷயம் வெளியே தெரிந்து விடாமல் இருப்பதற்கும் கூட தான் என்று கூறிவிட்டு காரை நோக்கி நகர்ந்து செல்கிறார்.
அதில் நிரப்பப்பட்ட தொகையை பார்த்து வாயடைத்துப் போய் நிற்கிறார்கள் அந்த பிணவறை அவரை ஊழியர்கள் இருவர்கள்.
கண்கள் திறக்கும்
பக்கம் 14 ஆக....