அழகே உன்னை மாற்றி எழுதிப் பார்க்கிறேன்

மௌனவிழி யில்மார் கழிப்பனி யின்பொழிவு
மாலைத் இளந்தென்றல் கூந்தல் தழுவுது
காதல் மொழிபேசும் தேனிதழ் கள்தன்னில்
புன்னகைரா கம்பா டுது
----எனது பதிவு வெண்பா வடிவில்

மார்கழிப் பனியில் வெப்பம் உந்தன்
கார்விழி பொழிவதோ குற்றாலத் தண்ணலை
வார்த்தவுன் தேனிதழோ காதல் கொஞ்ச
ஈர்த்திடும் இராகமிசை க்குது !
----சக்கரை வாசனின் கருத்து இயல்பு வரிகளில்


மார்கழிப் மென்பனிதன் னில்வெப்பம் ;உந்தன்நீள்
கார்விழி கள்பொழிவ தோகுற்றா லத்தண்மை
வார்த்தவுன் தேனிதழோ காதலில் கொஞ்சியே
ஈர்த்திடும் ராகமிசைக் கும்
---அதை வெண்பா வடிவில் சீரமைத்த கவிதை
அதன் கருத்து விளக்கம்

----இப்பொழுது உங்கள் எதுகை அழகு பொலியும் வரிகளை
ஒரு விகற்ப இன்னிசை வெண்பாவாக மாற்றியிருக்கிறேன்
வெண்பாவின் இனிமை வேறு எந்தப் பாவிலும் இல்லை
அவ்வையும் புகழேந்தியும் கோலோச்சிய பா வடிவம்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Oct-21, 10:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 149

மேலே