வாழ்க்கை
வாழ்க்கை என்னும் கணக்கு பாடத்தில்
ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கு போட்டு
வைத்துள்ளார் கடவுள். நீங்கள் என்னதான்
உருண்டு புரண்டாலும் அது படிதான் நடக்கும்.
அதில் இருந்து யாரும் தப்ப முடியாது.
அந்தக்கணக்கு சிலநேரங்களில் கூட்டலாகவும்,
சில நேரங்களில் பெருக்கலாகவும், சிலநேரங்களில்
வகுத்தலாகவும், சிலநேரங்களில் கழித்தலாகவும்
அரங்கேறும் காலங்கள் மட்டும் வேண்டுமானால்
வேறுபடும் ஆனால் கண்டிப்பாக நடந்தே தீரும்.