என்னவனின் அழகு

ஆண்களின்....
அடர்த்தியான கேசமும்.
குறும்பான கண்களும்.
அளவான இதழ்களும்.
அழகினும் அழகு தான்...

ஆனால்...

தலைகோதும் விரல்களும்- என்
விரல் கோர்க்கும் கைகளும்
கதை பேசும் விழிகளும்- என்
விழியோடு பேசும் மொழிகளும்
வண்ணம் பூசா இதழ்களும் - என்
நெஞ்சம் திருடிய சிரிப்பும்
கம்பிரமாய் தோன்றும் நடையும் - என்
நடையினை மாற்றிய கர்வமும்
தனி அழகுதான் என்றுமே

அவன் நெஞ்சம் எனும் - என்
மஞ்சத்தில் தலை சாயும் பொழுதிலும்
இமைக்காமல் ரசிக்கிறேன் - அவனின்
அழகை.. பேரழகை.....

எழுதியவர் : புவனேஸ்வரி (7-Oct-21, 4:48 pm)
சேர்த்தது : புவி
Tanglish : ennavanin alagu
பார்வை : 472

மேலே