வல்லரசு பாரதம்

வல்லரசு பாரதம் வசப்படுமே - அன்று
பதினெட்டைக் கடந்தோ ரெல்லாம்
பணிக்கென காத்திருக் காமல் - அவருக்கு
பணிகள் பல காத்திருக்குமே.

பொதுவிடம் பள்ளி நிறுவனம் - அங்கு
சுத்தம் சுகாதாரம் கழிப்பிடம்,
முழுமை பெற்றி ருக்குமே - அதில்
வலிமை பெற்றி ருக்குமே.

ஆண்டோர் ஆள்வோர் மற்றும் - வளம்
பலபெற்றார் சிகிச்சை பெற;
அமெரிக்கா செல்லார் அன்று - ஆனால்
அரசு மருத்துவம் செல்வார்.

மிளகாய்ச் செடியில் இனிமை - வெள்ளை
பருத்தி பார்த்து மோகம்,
காய்கனி கண்டு கனிவு - தென்னை
இளநீரில் போகும் தாகம்.

நெல்லோடு உரை யாடல் - கன்றுக்
குட்டியோடு ஆடலில்மனம் லயிக்கும்;
கடலைச் செடியில் பிரியம் - பயறு
தானியத்தில் இருக்கும் யோகம்.

மல்லி பிச்சி சாமந்தி - பூக்களின்
தோட்டத்தில் இனிய சுவாசம்,
சூரிய காந்தியின் வாசம் - சொக்கும்
வாய்க்கால் வரப்பு நேசம்.

கால்நடை அத்தனை மீதும் காதல்
மோட்டார் பம்ப் குளியல்;
கொட்டும் மழையில் கொங்காணி - சாக்குப்
பைதான் அதன் காரணி.

ஈரவரப்புகள் நடந்து விவசாயம் - வேலை
பல செய்ததில் கடும்பசி;
பம்ப்செட்டில் சீனிக் கிழங்கு - அவித்துத்
தின்பதில் வயிறு பசியாறும்.

வேளாண் வேலை வரமென - வயலோடு
வாழ்வெனக் கொண்டாடி மகிழ்வதில்;
விவசாயம் விரும்பப் படும் - கிடைக்கும்
அரசு வேலையைக் காட்டிலும்.

வள்ளுவரின் அறம் பொருள் - பாரதியின்
பாக்கள் மேலாண்மை செய்யும்;
சாதிகள் இருக்கும் இரண்டு - மதங்களும்
இருக்கும் நேயம் மிகக்கொண்டு.

கல்வி சுகாதாரம் விவசாயம் - மின்சாரம்
தகவல் தொழில்நுட்பம் தொழில்கள்,
போக்குவரத்து ராணுவக் கட்டமைப்பு - தன்னிறைவு
தாண்டி சிகரம் தொட்டிருக்கும்.

நூற்று முப்பதுகோடி மக்கள் - வளங்கள்
சேர்ந்தது நமது பாரதம்,
வேண்டும் கண்டு தெளிதல் - அதில்
உலகம் மிஞ்சும் வழிகள்.

அரசுகளின் வழிகாட்டல் வேண்டும் - மக்கள்
உழைப்பு ஒத்துழைப்பு வேண்டும்;
ஈடில்லா ஈடுபாடு ஆர்வம் - இவற்றில்
வல்லரசு உருவாகும் நிச்சயம்.

இனிய வாழ்த்துகளுடன்...
இரா. சுந்தரராஜன்.
🌹🙏👍😃

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (10-Oct-21, 9:23 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : vallarasu paaratham
பார்வை : 105

மேலே