அது ஒரு கனா காலம்❤

உன் முதல் தரிசனம்
கிட்டிய பொற் பொழுதுகளை
என் றென்றும் நீங்காமல்
யென் மனதில் குடி
வைத்திட்டேன்......

உன் மஞ்சள் நெற்றியில்
வில்லாய் வளைந்த புருவமத்தியில்
செஞ்சாந்துப் பொட்டிட்டு கீழ்
இரண்டு கருவண்டுகள் துடித்து
விரியக்கண்டேன்....

விழி மொழியில் மயங்கி
தாய் மொழி மறந்தேன்.
விழியாளை தனதாக்க மனம்
ஏங்கி தவிக்க உடன்
விரைந்தேன்.....

உன் இடையில் வீற்று
உன் மஞ்சள் முகம்பற்றி
மழலையில் மிழற்றிய மனம்
கவர் படைப்பைக் கண்டு
வெதும்பினேன்......

கட்டவி ழ்ந்த மனதை
அங்குசம் கொண்ட டக்கி
வழிந் தோடும் குருதியை
மனதினிலே இருத்தி முகம்
திருப்பினேன்......

ஒற்றைச் சுவர் தடுப்பிற்கு
மறுபுறம் மழலைக்கு நீபாடும்
தாலாட்டு, சுகமான உறக்கத்தில்
நான், என் அறையில்
இறைவன் எனக்களித்த வரம்மென
கண்டேன்.....

தகப்பனை தேடிய மழலைக்கு
பதிலாக உன் அழுகுரல்,
என் இதயத்தில் குத்தீட்டியாக
குருதி வழிந்தோட நான்
துடித்தேன்.....

மழலைக்கு ஆறுதலாக நீ
உருவாக்கும் கற்பனை தகப்பனாக
பிம்பம் தவறாமல் நானே
என் மன மேடையில்
உருமாறினேன்......

உன் கற்பனை தகப்பனாக
கச்சிதமாக பொருந்திய நிலையில்
நான் உன் எதிரில்,
உன் உதிரம் நம்
உதிரமாக என் மடியில்,
கவிதையாக என் தோள்
சாய்ந்து கையணைப்பிள் நீ,
நீ பாடும் தாலாட்டு
இனி நீபெறாத பிள்ளைக்கும்,
மனம்கனிந்தேன்.....

அது ஒரு கனா
காலம் நினைவாக இன்று
மனம்தித்தித்தேன்.....❤
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

எழுதியவர் : கவி பாரதீ (10-Oct-21, 1:29 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 727

மேலே