சரளதேவதாரு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சரள மெனுந்தேவ தாருவினாற் கண்ணீர்
விரளமா குங்கபமும் வீடுந் - தரளவெயிற்
றாமஞ்சு வாசம் வலியண்ணு தம்வாதம்
போமயஞ்சு ரத்துரமும் போம்

- பதார்த்த குண சிந்தாமணி

சரளதேவதாரக்கு சிலேட்டும தோடம், பல் நோய், இரைப்பு, ஐவகை வலிகள், நடுக்குவாதம், கபச்சுரம் இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Oct-21, 8:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே