கடற்கரை காதல்

கடற்கரை மணலில்
குழந்தைகள் "மணல் வீடு" கட்டி
மகிழ்ச்சி கொள்வது போல்..!!

நாமும் கடற்கரை மணலில்
அமர்ந்து "காதல் கோட்டை" கட்டி
நம் காதலை வளர்த்தோம்
மகிழ்ச்சி கொண்டோம் ...!!

"கடல் அலை" அழிந்தாலும் அழியும்
நம் "காதல் அலை" அழியாது
என்று சபதம் கொண்டோம்...!!

கடல் அலை வேகம் கொண்டு
வரும் போது உன் கையை
நான் இறுகப்பற்றி கொள்வேன்...!!

அதுபோல்
எங்கே அந்த ராட்சத அலை
உன்னை இழுத்து விடுமோ
என்ற அச்சத்தில்
நீ என்னை இறுக கட்டிப்பிடித்து
அணைத்துக் கொள்வாய்
அந்த சுகம் தனி சுகம்...!!

ஒவ்வொரு முறையும்
மனமே இல்லாமல்
நாம் பிரிவது போல்
கடற்கரையை விட்டு
பிரிந்து செல்வோம் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Oct-21, 9:32 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kadarkarai kaadhal
பார்வை : 94

மேலே