உயிர் தப்பிய எலி

உயிர் தப்பிய எலி

எப்ப வருவார்,
எப்ப போவார்,
தெரியாது.

வருகிற வழியும்,
போகிற வழியும்,
தெரியாது.

பகலில் சத்தமின்றி
இருந்திடுவார்,
இரவில் சட்டி பானை
உருட்டிடுவார்.

தூக்கத்தை கலைத்தே,
என் சீற்றத்தை
கிளப்பிடுவார்.

ஏதோ என்னவென்று
எழுந்து சென்றால்,
எங்கயோ போய்
ஒளித்திடுவார்.

சிலநாட்கள்
சிந்தனையில் வர
மாட்டார்,
மாற்று இடம் தேடி
போய்விட்டார் என
எண்ண!
மறுபடியும் சட்டி பானை
உருட்டிடுவார்

பூனை வளர்க்க
நினைத்தால்,
அதன் குணமே
பிடிப்பதில்லை.

பிள்ளையார் பாவம்
வேண்டாம்,
என எண்ணி
மன்னித்தேன் எலியை.

ஆக்கம்,
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (13-Oct-21, 1:08 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : uyir thappiya eley
பார்வை : 67

மேலே