🤷‍♂️அவனுக்காக அவள்🧕😟

கனிவாக நடந்தாள் - அவன்
கண்டுகொள்ளவில்லை....
கோவத்தை காட்டினாள் - அவன்
கோவமாக பேசவில்லை......
கெஞ்சலாக பேசினாள் - அவன்
கவனிக்கவில்லை......
பணிவாக பேசினாள்
பயன் ஏதும் இல்லை........
காதலை காட்டினாள் - அவனுக்கு
காதலே இல்லை
புரிந்து கொண்டு பேசினாள் -அவனுக்கு
புரியாமலில்லை.......
எப்படி பேசினாலும்
எந்த எண்ணத்தில் பேசினாலும்
அவன்
எண்ணம்போலவே நடக்கிறது
எல்லா நிமிடமும்......

தவறாக  இருந்தாலும்
சரியாக இருந்தாலும்
உண்மையாக இருந்தாலும்
பொய்யாக இருந்தாலும்
எப்படி இருந்தாலும்
இயங்காத மனம் அவனுக்கு.......
எப்படி இருந்தாலும்
அவனுக்காக அவள்
எப்போதும் இருப்பாள்.......
காதலுடன் மிக ஆவலுடன்
எதிர்பார்த்துக் கொண்டே.......

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (13-Oct-21, 3:48 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 245

மேலே