காதல்

அதுவே அவர்கள் பகிர்ந்த முதல் பார்வை
அவள் நினைத்தாள் அவன் அவளுக்கே என்று
அவன் நினைத்தான் இவள் எனக்காகவேதான் என்று
இப்படித்தான் அரும்பியது இவர்கள் காதல்
முதல் பார்வையிலேயே உள்ளங்கள் சேர்ந்திட
அரும்பிய காதல் பின்னே மலர்ந்தது
தடாகத் தாமரைபோல் அழகாய்
முழுவதுமாய் முழு நிலவாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Oct-21, 7:03 pm)
Tanglish : kaadhal
பார்வை : 99

மேலே