💝 தோழி👣

💜💜💜💜💜💜

எங்களுக்குள்
காதலெல்லாம் இல்லை...
அல்லது
அவளுக்குள்
காதலெல்லாம் இல்லை....

ஆனால்
எனக்கு அவள்
நல்ல தோழி...

காலையில்
சந்தித்தோம்...
"உன்கிட்ட
இரண்டு விஷயங்கள்
சொல்லனும்...
ஒன்னு நல்லது
ஒன்னு கெட்டது ‌..
எதை முதலில்
சொல்ல...?"
என்றேன்.

"முதல்ல கெட்ட விஷயத்தை
சொல்லிடு...".

"எங்க
ஏரியாவுல,
ஒரு பையன்,
ரொம்ப நாளா
உன்னை ஃபாலோ பண்றான்"

"சரி..
இப்ப
நல்ல விஷயத்தை சொல்லு...",
என்றாள்
துளியும்
அதிர்ச்சியடையாமல்.

அதானே...
எந்த பெண்தான்,
இதற்கு அதிர்ச்சியடைவாள்...?.
அப்படி
நடிக்கத்தானே செய்வாள்...?.
இவள்
நடிக்கக் கூட இல்லை.

"நல்ல விஷயம்
என்னன்னா,
அவன்
உன்னை காதலிக்கிறான்
என்று
நினைக்கிறேன்..."

"ஹா...",
என நடித்தாள்,
நெஞ்சில் கைவைத்து...

"எங்க அம்மா சொல்லுவாங்க,
நல்ல விஷயத்தை
ஒன்றுடன் நிறுத்தி
கொள்ளக்கூடாது... என்று.
அதனால்
இன்னொரு
நல்ல விஷயத்தையும்
சொல்றேன்...",
என்றேன்.

"சொல்லு..."

"அந்த பையன்
நான்தான்...".


.


✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (13-Oct-21, 7:55 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 66

மேலே