God is great

***********************
முதலிலேயே
சொல்லி விடுகிறேன்..
இது கவிதை அல்ல...

இன்றைக்கு
ஆயுத பூஜையாம்...
நமக்கும் அதற்கும்
சம்பந்தம் இல்லை...
என்றுதான்
நினைத்தேன்.

ஆனால்...
இந்த கடவுள் இருக்கிறாரே...
நல்லதும் செய்கிறார்.
கெட்டதும் செய்கிறார்..
காட் ஈஸ் கிரேட்

"மாமா...
இன்னிக்கு உங்க பாடு ஜாலிதான்.
இன்னிக்கு வீட்டை எல்லாம் சுத்தம் செய்யனும்.
எனக்கு நிறைய வேலை இருக்கு... அதனால்
இன்னிக்கு
என்னோட தொல்லை
உங்களுக்கு இல்லை.."
(கவிதை சொல்கிறாளாம், கவிதைக்காரி..)

"ஆமா...
காட் ஈஸ் கிரேட்.",
என்றேன்,
அவள் சொன்னதற்கு
துளியும் சம்பந்தமில்லாமல்.
(ஒரு வேளை, இன்றைக்கு அவள் இம்சை இல்லை என்ற சந்தோஷமோ..)

"ரொம்ப சந்தோஷப்படாதீங்க‌..
சாயங்காலம் வரைக்கும் நான்.
அப்புறம் வந்து எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா திருப்பி தருவேன்.."
என்றாள்.

"அய்... ஜாலி.
மொ(மு)த்தமா
திரும்பி தருவியா....?"

"அய்ய...
அலையாதீங்க‌.
இப்படியெல்லாம் பேசாதீங்க..
நான் இன்றைக்கு விரதம்.."
என்றாள்...

நான் ஏற்கனவே சொல்லவில்லை?
கடவுள் நல்லதும் செய்கிறார்..
கெட்டதும்....

எப்படியும்
விரதம் முடிந்துதானே ஆகவேண்டும்...?.
இரவில் பாத்துக்குறேன்டி
உன்னை....

"அக்கா...மாமா..."
திடீரென
ஒரு சத்தம்
வீட்டின் வெளியே இருந்து.

வந்திருந்தவள்,
கவிதைக்காரியின் தங்கை.
அதாங்க,
என் கொளுந்தியா...

எனக்கு
உள்ளுக்குள்
ஏராளமாய் சந்தோஷம்.
அதை மறைத்துக்கொண்டு,

"வாம்மா..."
என்றேன் சாதாரணமாக.

சில பல
நலம் விசாரிப்புகளுக்கு பின்,

"அக்கா...
எனக்கு பதினைந்து நாள் லீவு...
இங்கியே தான் இருக்கப்போறேன்.
ஒரு வினாடி கூட உன்னைவிட்டு பிரிய மாட்டேன்...",
என்றாள்
என் கொளுந்தியா,
என் மனைவியிடம்.

போச்சுடா...
நான் தான் சொன்னேனே...
திருப்பி திருப்பி சொல்லனுமா..?
மூன்றாவது பாராவை.



✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (14-Oct-21, 1:16 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 63

மேலே