பசுமோர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வீக்க மகோதரமுள் வீறுகுன்மம் பாண்டுபித்தந்
தாக்குமருந் திட்டததி சாரமொடு - கூக்குரலே
மாறாத் திரிதோஷ மந்தமனற் றாகம்போம்
வீறாவின் மோருக்கு மெய்

- பதார்த்த குண சிந்தாமணி

இம் மோரினால் வீக்கம், மகோதரம், வயிற்றுவலி, பாண்டு ரோகம், பித்தம், இடுமருந்தால் வரும் நோய்கள், பேதி, திரிதோடம், அக்கினிமந்தம், வெப்பம் இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Oct-21, 8:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே