காணவில்லை

காணவில்லை.

என்னோடு இருந்த
என் தாயைக்
காணவில்லை,
எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை.

ஏங்கியே என் மனம்
பரிதவித்தபோது,
உதித்தது என் மனதில்
உண்மை ஒன்று.

இப்ப சில காலமாகவே
நான்,
கோவில் குளம் என்றும்,
நல்ல நாள் கெட்ட நாள்
என்றும்,
தோஷம் பரிகாரம்
என்றும்,
மூட்டைப்பூச்சிகளை
என்னுடன் சேர்த்துக்கொள்ள,
கடிதாங்க முடியாமலே!
அன்னை அகன்று
விட்டாள் என்று.

அக்கணமே நான்
மறுபடியும், நானாகிவிட்டேன்.
அன்னை மீண்டும்
வருவாள்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (16-Oct-21, 7:50 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : kaanavillai
பார்வை : 95

மேலே