பனையோலை விசிறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பனைவிசிறி தன்னாற் பருத்ததொரு வாத
னையுமைய நோயும் விலகுங் - கணைபித்த
நோயு மருசியென்ற நோயுங் குடியேகுந்
தேயுமிடை மாதே தெளி

- பதார்த்த குண சிந்தாமணி

பனைவோலை விசிறியினால் வாதம், பித்தம், கணை, சிலேட்டுமம், சுவையின்மை இவை நீங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Oct-21, 9:40 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே