இயற்கை மகிழ்ச்சியாக இருக்குது நாமும் ஏங்க இருக்க கூடாது

உலகமும் கிரகங்களும் நமக்கு தெரியாமல் பிரபஞ்சத்தில் குதித்தது
இப்போதெல்லாம் சூரியன் சரியாக கிழக்கு திசையில்தான் உதிக்குது
சந்திரன் கூட பௌர்ணமி அன்று நல்லாத்தான் பிரகாசித்து ஒளிருது
நட்சத்திரங்களும் ரொம்ப தொலைவில் கண்சிமிட்டி அழகா சிரிக்குது

விலங்குகள் சரியாக அதனதன் வேலைகளை பார்த்துவிட்டு வாழுது
ஆறுகள் எப்போதோ ஒரு தடவை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுது
பூச்செடிகள் தவறாமல் நேரத்தில் மலர்ந்து நம்மை மகிழ்விக்குது
மரங்கள் ஒரே இடத்தில நின்று நமக்கு ஆக்ஸிஜன் கிடைக்க உதவுது

இயற்கை படைப்பில் அனைத்தும் மிகவும் சரியாக தான் செயல்படுது
காற்று காலை மாலையில் தென்றலை நம் மீது இனிமையா மோதுது
தேன் இனிப்புடனும் பாகற்காய் கசப்புடனும் நம் உடலை பாதுகாக்குது
நம் உடலில் உள்ள உறுப்புகளும் அனேகமாக சரியாத்தான் இயங்குது

அப்போ நாம், இந்த நாம் மட்டும் ஏனுங்க இப்படி தாறுமாறா இருக்குது?
மனதில் ஒன்று உதட்டில் ஒன்று என்று ஏனுங்க ஓரவஞ்சனை செய்யுது?
அக்கம் பக்கத்தில் உள்ளவன் உயர்ந்தால் நம் முகம் ஏனுங்க சுருங்குது?
தெரிந்தவர்கள் அல்லலுறும்போது கூட நம் மனம் ஏன் கல்லாக இருக்குது?

இப்போ தெரிஞ்சு போச்சுதுங்க, இதுக்கெல்லாம் முக்கிய காரணம் யாருன்னு?
நமக்குள்ளே இருந்து கொண்டு நம்மையே கவிழ்க்கப்பார்க்கும் நம் மனசு தான்
இந்த மனசு தாங்க பல பேரை வாழவைக்குது பலரை தாழ வைத்தும் கவுக்குது
அட ஏனுங்க, இந்த மனசு இப்படி இருக்குது, தெய்வம் மிருகம் பாதி பாதின்னு?

இப்போ இதுக்கெல்லாம் கவலை பட்டு தம்பிடி உபயோகமும் இல்லீங்கோ
இனிமேலாவது மனசை கொஞ்சம் கெஞ்சி கூத்தாடி நல்லாவச்சிப்போமுங்கோ
எப்பவும் ஆளுங்க கூடவே இல்லாமல் கொஞ்சம் தனிமையில் இருப்போமுங்கோ
மௌனமோ தியானமோ ஏதாவது ஒன்றை தினமும் நாம் கடைபிடிப்போமுங்கோ
நம் ஒவ்வொருவரும் தினமும் ஒரு 15 நிமிடங்கள் மௌன பயிற்சி செய்வோங்கோ
கொஞ்ச நாளில் பாருங்கோ, உங்களுக்கும் குடும்பத்துக்கும் மகிழ்ச்சி பொங்குங்கோ
இப்போ புரிஞ்சதில்ல, உடனே போங்கோ, மேலே சொன்னதை செய்து பாருங்கோ
நீங்க முன்னேற்றம் கண்டா தெரிஞ்சவங்களுக்கும் விரைவில் தெரியப்படுத்துங்கோ
அனைவரும் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்ந்தா வேறு என்ன வேண்டும்,சொல்லுங்கோ?

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (16-Oct-21, 4:24 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 82

மேலே