கறுப்பன்

கறுப்பன்.

என் பிள்ளை
தென்னம் பிள்ளை,
அது தந்த
இளநீர் இது.

எட்டி நின்று
பார்க்காதீர்,
என்னிடம் வந்து
வாங்குங்கள்,
குடித்து விட்டு
சொல்லுங்கள்,
கருப்பட்டி என்று
சொல்லிடுவீர்.

என் விலாசம்:
கறுப்பன்,
அடையார் சந்தி
அரசமரம்,
அக்கம் பக்கம்
சொல்லுங்கள்.

வாங்கியதற்கு
மிகவும் நன்றி
இந்தப் பூ 🌹
உங்களுக்கு.

ஆக்கம்,
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (17-Oct-21, 7:39 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 40

மேலே