அன்னை மடியில்

அன்னை மடியில்.

ஆடுவேன் பாடுவேன்
ஆனந்தமாய் அன்னையின்
புகழ் பாடிடுவேன்.

ஆடிப் பாடியே
அன்னை மடியில் - நான்
அயரந்திடுவேன்.
அயர்ந்திருக்கும்
வேளையிலே - என் இறந்த
அப்பா அம்மா இடம்
அறிந்திடுவேன்.

அவர்கள் இருக்கும்
இடம் ஒரு
குடிசை அன்றோ!
அங்கு நான்
பார்ப்பதெல்லாம்
அமைதி என்னும்
வெளிச்சம் அன்றோ!
வெளிச்சத்தில்
தெரிவது எல்லாம்
மகிழ்வு நிறைந்த
பெற்றவர் முகங்கள் அன்றோ.

ஆடிடுவேன் பாடிடுவேன்
ஆனந்தமாய், மீண்டும்
அன்னை மடியில்
அயர்ந்திடுவேன்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (17-Oct-21, 5:45 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : annai madiyil
பார்வை : 62

மேலே