இவள்

என்னவளே.. என்னவளே..
எங்கே இருக்கிறாய்
தரணி முழுவதும் தண்ணீரில்
முழுக நான் மட்டும் தாகத்தில் தவிக்கிறேன்

உன் இடையில் நான் விழுந்து
இடம் தெரியாமல் போவேனோ
மடியில் கிடப்பதை
மறந்தே போனேனே

மயக்கும் கன்னியே
மருதாணி வாசம் உன் கூந்தலடி
மய கன்னனும் மயங்குவனடி
மாங்கனியின் சுவை நீயடி

எழுதியவர் : (17-Oct-21, 9:23 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : ival
பார்வை : 66

மேலே